5 இணையதளங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை பெறுங்கள்

நாம் அனைவரும் கல்லூரியில் பட்டம் பெற்று அதற்கு இணையான வேலைவாய்ப்பில் இணைவது சற்று அரிதான ஒன்றாகும்.



ஏனெனில் கல்லூரியில் படித்த துறைக்கும் மற்றும் பணியிடத்தில் வேலை செய்யும் பொறுப்பிற்கும் தொடர்பு சற்று குறைவு.


நீங்கள் படித்த துறைக்கு தகுந்த பணியினை ஒரு சில இணையதளங்களில் இலவசமாக வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றது.


1.Linkedin



LinkedIn Jobs



இந்த தளத்தை தனியார் துறை வல்லுநர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்கள்.
இவற்றின் மூலம் தனது வேலைவாய்ப்பு மற்றும் 
தொழிலுக்கு தேவையான வழிகாட்டிகளை அறிந்து தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல இந்த தளத்தில் கட்டணமின்றி சான்றிதழுடன் பயிற்சி வகுப்புகள்  இருக்கிறது.
அந்த வகுப்புகளை ஆன்லைனில் படித்து முடித்த பிறகு சான்றிதழ் பெற்று குறுகிய கால பயிற்சிகளில் இலவசமாகவும்  கட்டணத்துடனும் தனியார் துறை நிறுவனங்களில் இணைந்திருங்கள் அதன் பிறகு ஆறு மாத காலமோ அல்லது ஓராண்டு அனுபவம் பெற்று பெரிய நிறுவனங்களுக்கு நேர்காணல் செல்லுங்கள் கண்டிப்பாக சிறப்பான பணிகளில் அமர்த்தப்படுவீர்கள்.

அதே போல் உலகில் உள்ள பெரிய நிறுவனங்களின் தகவல்கள், செயல்பாடுகள் மற்றும் விசேஷங்கள் இவற்றில் பகிரப்படும் அவற்றை அறிந்து முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்.


இவற்றில் பணியை பெறுவதற்கும் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.





2.Indeed

Indeed Jobs



இந்த ஐந்து இணையதளங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Indeed. 

பிற இணையதளங்களில் போல இலவசமான முறையிலே இந்த தளமும் வேலைவாய்ப்புகளை அளிக்கும்.


இது ஏன் எனக்கு பிடிக்கும் ?


இந்த இணையத்தளத்தின் வாயிலாக குறுகிய கால பயிற்சி மேற்கொண்டேன் அவற்றின் மூலம் ஏறக்குறைய 50,000 பணத்தை தளத்தின் மூலமாக சம்பாதித்தேன்.ஆகையால் இந்த  தளம் தனிப்பட்ட முறையில்  பிடிக்கும்.


இந்த தளத்தில் தனியார் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் பணியமர்த்தும் குழு இவற்றில் சற்று மும்முரமாக இருப்பார்கள் பயன்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பினை தேடுவதற்கும் மிகவும் எளிமையான வடிவமைப்பு கொண்டதாகும்.


இவற்றில் நமது அருகிலுள்ள நகரத்தின் வேலைவாய்ப்புகளையும் மற்றும் பெரிய தனியார் துறை நிறுவனங்களின் வேலைப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.


இவற்றில் பணியை பெறுவதற்கும் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.


உங்களிடம் மறுதொடக்கம் 
(  Resume ) இல்லையென்றாலும் இந்த தளத்திலேயே உருவாக்கலாம்.






3.Glassdoor


Glassdoor Jobs



இந்த தளமும் சற்று முன் படித்த ( Indeed ) தளத்தைப் போல வடிவமைப்பு பெற்றது.இவற்றிலும் நல்ல தொழிற்துறை சார்ந்த மற்றும் அலுவலக சார்ந்த துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றது.

இவற்றில் பணியை பெறுவதற்கும் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.


நீங்கள் முன்னதாக பணிபுரிந்த தொழிற்சாலை மற்றும் அலுவலகத்தின் மதிப்புகள் நிறை குறைகளைக் நிரப்பவதன் மூலம் மற்ற மக்களும் படித்து தெரிந்து கொள்ள முடியும்.

இவற்றின் மூலம் பணியிடத்தில் ஒழுக்கத்துடன் கடைப்பிடிக்க உதவுகிறது.


உங்கள் துறைக்கு ஏற்ப சமூகத்துடன் இணைந்து புதிய தகவல்கள், திறமைகள் மற்றும் விதிமுறைகளை தெரிந்து கொள்ள முடியும்.





4.Naukri

Naukri Jobs



இந்த தளத்தில் பல‌ தனியார் துறை நிறுவனங்கள் அவர்களுக்கு தேவைப்படுகின்ற காலிப்பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல உங்கள் மாவட்டம் முதல் அனைத்து நாடுகளுடைய வேலைவாய்ப்புகள் சீராக இருக்கும்.


இவற்றிலும் பணியை பெறுவதற்கும் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.


பெரிய தனியார் நிறுவனங்ளான Tata, Mahindra, Sutherland,Wipro  போன்ற நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்ய விரும்பினால் அதற்கான திறன்களை அறிந்து கொண்ட பிறகு அவற்றின் பணிக்கு விண்ணப்பியுங்கள்.


இந்த தளத்தில் விண்ணப்பித்த பிறகு மின்னஞ்சல் முகவரி மற்றும் தளத்தில் உற்றுநோக்கல் இருத்தல் அவசியம்.



5.Nithra

Nithra Jobs



தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாக வேலைவாய்ப்பினை அள்ளிக் குவித்து கொண்டிருக்கும் நித்ரா என்கிற நிறுவனம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிகள் மற்றும் 500க்கு மேற்பட்ட நகரங்களில் சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கும் நித்ரா நிறுவனம்.

இந்த தளமும் எந்த வித கட்டணமின்றி வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.


வேலை வழங்குபவர் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான உள்நுழைவு முறை சற்று மாறுபடும்.



இந்த தளத்தின் வாயிலாக உங்களின் வேலைவாய்ப்பினை இந்த ஆஃப்களில் தேடி சரியான வேலைப்வாய்பைப் பெற்று வளர்ச்சியைக் அடையுங்கள்.


6.Bonus 

தற்போது நாம் பார்த்த அனைத்தும் தனியார் துறை நிறுவனங்கள் உடைய வேலைவாய்ப்பு தளங்கள் ஆகும்.

நம்முடைய தமிழ் மக்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இலவச வேலைவாய்ப்பு தளம் மாவட்ட வாரியாக உள்ள தனியார் வேலைவாய்ப்புகளை அறிந்து அவற்றிற்கு ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.


தனியார் துறையில் இந்த விண்ணப்பங்களை ஏற்று நேர்காணல் அமைத்து இலவசமாக வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுகிறது.


அவ்வப்போது மாவட்டத்தில் நடுக்கக்கூடிய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களும் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த அரிய வாய்ப்பை ஏழை மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


முடிவுரை

மனிதன் திறன்கள் மூலம் வல்லுநராக மாற்றம் அடைகிறான்.

நீங்களும் திறன்களை கற்றுக் கொண்டு வல்லுநராக உருமாறி வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


வறுமையை ஒழித்திடுங்கள் ; வளர்ச்சியைக் அடையுங்கள் !

                                                             -  ஹேமநாத்.ம


கருத்துரையிடுக

0 கருத்துகள்