கோடை காலத்தின் போது வருடதோறும் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பல விளைவுகளை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாற்றுகிறது.
ஆகையால் உணவு பழக்கங்களை சீராகவும் சரியானதாக இருக்க சில சிறந்த உணவு முறைகளை நாங்கள் பதிவிடுகிறோம்.
கோடைகாலத்தில் வரக்கூடிய விளைவுகள்
தோல் அரிப்பு, சொரி சிரங்கு, முகப்பருக்கள், சரும பொலிவின்மை மற்றும் அலர்ஜி போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
கோடை காலத்தில் என்ன வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும் ?
அதிக காய்கறிகள் மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
- வெள்ளரிக்காய்
- முள்ளங்கி
- சுரைக்காய்
- தர்பூசணி
- மூலாம் பழம்
- ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி
- ஸ்ட்ராபெர்ரி
- டிராகன் ஃப்ரூட் மற்றும் கிவி ஆகும்.
கோடை காலத்தில் நீரேற்றமாக இருக்க உதவும் முக்கிய பானங்கள்
- தண்ணீர்
- இளநீர்
- மோர்
- எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாறுகள்.
கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் ?
- அசைவ உணவுகள்
- காபி மற்றும் டீ
- காரமான உணவு பொருட்கள் மற்றும் அதிக உப்பு நிறைந்த பொருட்கள்
- துரிதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் வறுத்த எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்க்க வேண்டியது சிறந்த நடவடிக்கையாகும்.
இந்த உணவு முறைகளை கோடை காலம் முடியும் வரை உணவு பழக்கத்தில் நடைமுறையாக வகுத்துக் கொள்ளுங்கள்.
செயற்கை உணவுகளை விட இயற்கை உணவுகளை உண்டு வளமும் நலமும் பெற்றிடுங்கள்.
0 கருத்துகள்