T Shirt Printing Business 2025

 T Shirt Printing Business 2025

டி சர்ட் அச்சிடும் தொழில் எவ்வாறு தொடங்குவது தேவையான பொருட்கள் பற்றிய விரிவான தகவல்களை அறிந்து கொள்ள கட்டுரையை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.



இந்த வணிக யோசனை சிறந்த யோசனை தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் டிசர்ட்களை இருபாலாரும் அணிந்து கொள்கின்றனர்.

அந்த டி சர்ட்ல் நிறைய இடங்களில் நான் கவனித்த ஒன்று, சாதாரண டி சர்ட்டை விட அச்சிட்ட டி சர்ட் பலரால் விருப்பப்பட்டு வாங்கி அணிந்து கொள்கின்றனர்.

டி சர்ட் வணிகத்தை சிறந்த தொழிலாக மாற்ற தரம் வாய்ந்த டி சர்ட்களை ஆராயுதல் வேண்டும்.

டி சர்ட்கள் அதிக அளவு உற்பத்தி செய்து பிற இடங்களுக்கு விற்பனை செய்யும் இடம் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டமாக பல ஆண்டுகளாக திகழ்கிறது.

திருப்பூரில் நேர்மையான உற்பத்தியாளர் மற்றும் தரம் வாய்ந்த டி சர்ட்களை ஆர்டர் அடிப்படையில் வாங்கி பிரிண்ட் செய்து விற்று லாபம் பெறுங்கள்.

அந்த டி சர்ட் தரம் வாய்ந்தவையாக இருப்பின் அவற்றின் மூலம் ஏற்கனவே வாங்கி பயன்படுத்திய வாடிக்கையாளர் மறுமுறையும் அதே வகையான டி சர்ட் வாங்க ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

ஏனெனில் செலவிடும் பணத்திற்கு ஈடாக அந்த பொருள் பயன்படுகின்றதா என்று மனக் கேள்வி கேட்டுக்கொள்கின்றனர்.


எப்படி தொடங்குவது ?

அச்சிடப்பட்ட டி சர்ட் களை ஆன்லைன் மூலம் Instagram, YouTube வீடியோக்கள் மூலமாக விளம்பரம் செய்து விற்பனையை அதிகரிக்க முடியும்.

அச்சிடப்பட்ட டி சர்ட்களை சிறிய மற்றும் பெரிய துணிக்கடைகளுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நல்ல வருமானமும் பெற முடியும்‌.

வணிகத்திற்கு தேவையான பொருட்கள் ?

1.Heat Press Machine ( HPM )

டி சர்ட் அச்சிட முதன்மையான பொருளாக திகழ்கிறது.மெஷின் மூலம் Cap,Mugs, Gifts  Keychains போன்றவைகளிலும் பிரிண்ட் செய்தல் முடியும்.

 இந்த HPM மூலம் டி ஷர்ட் சீரான வடிவமைப்பிற்கு மாற்றுவதற்கும் மற்றும் வெப்ப அழுத்தத்தையும் Hydraulic மூலம் பயன்படுத்தப்படுகிறது.

HPM மெஷின்கள் டிசைன்களை டி சர்ட்ல் வெப்ப அழுத்த மூலமாக பதியப் வைக்கிறது.

Heat Press Machine  வாங்குவதற்கு இங்கே தொடுங்கள்.

இந்த மெஷின் Made in India என்ற பொருளாக விளங்குகிறது.


2.Canva

இந்த கருவி மூலம் புதிய டிசைன்களை எளிய வடிவில் கற்பனைக்கேற்ப உருவாக்க முடியும்.

இவற்றில் இலவச மற்றும் கட்டண அடிப்படையில் செயல்படுத்த முடியும்.

டிசைன்களை பலராலும் ஈர்க்கக் கூடிய வகையில் டிசைனாக  இருக்க வேண்டும்.

Elements, Texts, Frames இலவச சில படங்கள் வீடியோக்கள் இருப்பதை பயன்படுத்தி அதன் மூலம் பலருக்கும் பிடித்த டிசைன்களை எளிதாக உருவாக்க முடியும்.

Templates, Designs, Layouts மற்றும் Marketing போன்ற வசதிகள் மூலமாக இலவசமாக புதிய வித டிசைன்களை அமைத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்களுக்கு தேவையான வடிவில் JPG, PNG, GIF, PDF PRINT போன்ற வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இந்த இலவச தளத்தை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.


3.Printer

Canvaவில் உருவாக்கிய டிசைன்களை  டி சர்ட் வடிவம் மற்றும் அளவுக்கு ஏற்ப அவற்றை தெளிவான நிறத்தில் பிரிண்ட் செய்து கொள்ளுதல் வேண்டும்.

பிரிண்டர் வாங்க வேண்டிய தேவை இருந்தால் Ink Jet Printers , Sublimation Printers Direct To Garment Printers போன்ற பிரிண்டர்கள் இந்த வணிகத்திற்கு பொருத்தமானதாக இருக்கக்கூடும். 

Printer வாங்குவதற்கு இங்கே தொடுங்கள்.


4.Mini Heat Press Machine 

இந்த கருவியின் மூலம் உங்களின் லோகாவை எளிதாக பிரிண்ட் செய்தல் முடியும். 

இதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவினை பல வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்

Mini Heat Press Machine வாங்குவதற்கு இங்கே தொடுங்கள்.


5.Lint Roller 

இந்தக் கருவி மெஷின் மீது டி ஷர்ட் சீராக அமைத்த பிறகு எந்த வித மடிப்புகள் இன்றி இருக்கவும். பிரிண்ட் செய்த பிறகு எந்தவித சிக்கல்களும் இல்லாமல் இருக்க இந்த ரோலர் பயன்படுத்தப்படுகிறது. 


இந்த 10 செ.மீ நீளமுள்ள ரோலர் மூலம் மடிப்பு மற்றும் எந்த வித சிறு பொருட்களும் இருப்பின் அவற்றை அறிந்து கொண்டு அவற்றை நீக்கக் கூடிய வகையில் இது பெரு உதவியாக இருக்கிறது.

Roller வாங்குவதற்கு இங்கே தொடுங்கள்.


வணிகத்தை எவ்வாறு தொடங்குவது ?

நீங்கள் உருவாக்கிய டி ஷர்ட் பிரிண்ட் செய்த துணியை விற்பனைப்படுத்த உங்களின் நிறுவனத்திற்கு சொந்தமான இ காமர்ஸ் தளம் இருக்க வேண்டும்.



டி சர்ட் அச்சிடப்பட்ட ஆர்டர்கள் பெறப்படும் இடங்கள் ஊர் திருவிழாக்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் இருந்து ஆர்டர்கள் குவியும்.


இ-காமர்ஸ் தளத்தில் புதிய வகையான துணிகளை அடிக்கடி புதுப்பித்தல் மற்றும் சரக்கு விவரங்களை அடிக்கடி சோதிக்க வேண்டும். 


Inventory குறைந்திருந்தால் அந்த வகையான பொருளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.


எதன் அடிப்படையில் அந்த ஒரு பொருள் அதிக விற்பனையடைந்தது என்று ஆராய வேண்டும். 


உங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான சமூக ஊடகத்தின் பக்கங்கள் நிர்வகிக்க வேண்டும் அந்தப் பக்கத்தில் புதிய தகவல்கள்  அல்லது துவக்கங்கள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் வெளியிட வேண்டும்.


சமூக ஊடகத்தின் பக்கத்தின் வாயிலாக உள்ளூர் விழாக்கள், கலாச்சார நிகழ்வுகளின் வாழ்த்துக்களை பகிர்வதன் மூலம் தன்னுடைய விற்பனைக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும்.


எந்த தளத்தில் அச்சிடப்பட்ட டி ஷர்ட்களை விற்பனை செய்ய வேண்டும் ?


1.Possible Wonder

உங்கள் நிறுவனத்திற்கு ஏற்றவாறு தற்போதைய போக்கு அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் செய்து தரப்படும்.

தளத்தின் வேகம், பாதுகாப்பு மற்றும் நிறங்கள் உங்களின் நிறுவனத்திற்காக மட்டுமே டிசைன்களை செய்து உருவாக்கி தருகிறோம்.

எங்களின் சேவைகளை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.


2.Amazon

உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் தளமான அமேசானில்  வாங்குவதற்கு மட்டுமல்லாமல் விற்பனை செய்யவும் முடியும்.

அமேசான் விற்பனையாளர் கணக்கை திறக்க 15 நிமிடங்களே போதுமானது.

உங்கள் பொருளை இலவசமாக விற்பனை செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த தளத்தில் உங்கள் உங்கள் தயாரிப்புகளை பட்டியலிடுங்கள் மற்றும் அவற்றின் விவரங்களை அளித்திடுங்கள்.

அமேசானில் விற்பனை செய்வதற்கு வீடியோவின் மூலமாக படிப்படியாக அறிந்து கொள்ள வேண்டுமானால் இங்கே கிளிக் செய்யவும்.


3.Meesho 

இந்த தளமும் அமேசானை போலவே பலருக்கும் தெரிந்த தளங்களில் ஒன்றாகும்.

இந்த நிறுவனத்தில் உங்கள் பொருட்களை இலவசமாக விற்பனை செய்ய முடியும்.

விற்பனை செய்த பொருட்களின் மூலமாக லாபத்தை அடைய முடியும்.

உங்கள் பொருளை இலவசமாக இந்த தளத்தில் விற்பனை செய்ய கிளிக் செய்யவும்.


முடிவுரை 

இந்த வணிக யோசனை மூலமாக உங்கள் சொந்த தொழில் கனவை நினைவாக்க இன்றே அதற்கான முயற்சியை செய்து வெற்றி பெறுங்கள்.

இன்றிலிருந்தே உழைத்திடுங்கள் ; நாளை உயர்ந்திடுங்கள் !.

                                                    - ஹேமநாத்.ம

 




கருத்துரையிடுக

0 கருத்துகள்