வீட்டில் அமர்ந்தபடி டிஜிட்டல் திறன்களை எளிதாக கற்றுக் கொள்ள முடியுமா ? முடியும் !.
![]() |
இந்த திறன்களை கற்று சொந்தமான தொழிலை தொடங்க அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் யோசனைகளை பெறுங்கள்.
நான் சிறுவனாக இருந்த போது என் பெற்றோர்கள் ஒரு சிறந்த திறனை கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.
நிதி நிறுவனத்தின் மீது சற்று ஆர்வம் இருந்ததனால் Tally ERP 9 என்ற திறனை கோடைகால பயிற்சியினைக்,உரிய சான்றிதழ் உடன் பயிற்சி நிறுவனத்தில் கற்றுக்கொண்டேன்.
அதன் மூலமாக 6 மாத சம்பளம் இயந்திரவியல் விற்பனை கடையில் கணக்காளராக பணிபுரிந்தேன்.
இதற்கு முழு காரணம் பெற்றோரின் அறிவுரையும் சான்றிதழ்யும் மட்டுமே !
அதேபோல தற்போது கற்க வேண்டிய திறன்கள் வீட்டில் இருந்தப்படியே கற்றுக் கொள்ள முடியும்.
1.Video Editing
![]() |
அனைத்து மக்களும் வீடியோக்கள் மூலமாக புதிய பரிணாமத்திற்கு ஏற்றவாறு அமைத்து கொண்டு உள்ளனர்.
பிறந்தநாள், திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள், சினிமா காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் வீடியோக்களை பயனர்கள் வெகுவாக விரும்புகிறார்கள்.
நம் வாழும் வாழ்க்கையில் வீடியோக்கள் முக்கிய பங்காக மாறியிருக்கிறது.
YouTube, Instagram, Facebook போன்ற தளங்களில் வீடியோக்களின் பங்களிப்பு மற்றும் அவற்றின் தேவையும் அதிகமாகி உள்ளது.
ஆகையால் தொழில்முனைவோர் முதல் கல்வி பயிலும் மாணவர்கள் வரை வீடியோக்கள் மூலமாக எளிதாக புரிதல் அடைய சாத்தியம் இருக்கிறது.
நாம் எடுக்கும் ஒரு வீடியோவை உருவாக்கவும், திருத்தவும், மாற்றி அமைக்கவும் எளிதாகவே முடியும். அதற்கு சற்று நேரம் எடுக்கும்.கவன குறைவால் சிறிய பிழை ஏற்பட்டால் கூட துல்லியத்தன்மை இழந்து விடும்.
வீடியோக்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் சிறிய வணிகங்கள் முதல் பெரிய வணிகங்கள் வரை வீடியோக்கள் மூலமாக தயாரிப்பு பொருட்கள் பிராண்ட் அடிப்படையில் வெளியிடப்படுகிறது மற்றும் நோக்கங்கள் வெளியிடப்படுகிறது.
ஒரு நட்சத்திர ஓட்டலில் சிறு படங்களை விட ஒரு வீடியோவில் அந்த நட்சத்திர ஹோட்டலின் உணவுமுறை சூழல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பலருக்கும் தெரிவிக்க முடியும்.
இவற்றின் மூலம் அந்த நட்சத்திர ஓட்டலுக்கு நிறைய புதிய நபர்கள் உணவு அருந்த வருவார்கள்.அதன் மூலம் ஓட்டலுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
நீங்கள் எடுத்த வீடியோவை எந்தவித திருத்தம் இல்லாமல் வெளியிடுவது சற்று ஆர்வமாக இருந்து விடாது. அவற்றை தனித்துவமாக மாற்ற Text, Effects,Stickers,Music மற்றும் Filters களை திருத்தம் செய்வது மூலம் நிறைய பார்வையாளர்களைக் வெகுவாக ஈர்க்க உதவும்.
இந்த செயல்கள் செய்வதன் மூலமாக Social Media Creators அதிக பயனர்களை தன் பின்தொடர்பவர்களாக இருக்கின்றனர்.
வீடியோ எடிட்டிங் செய்ய கடினம் கிடையாது எளிதான ஒன்று.அவற்றை இன்றே கற்றுக் கொண்டு தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எப்படி தொடங்குவது ?
நீங்கள் எடுத்த வீடியோவை முழுமையாக பார்த்துக் கொண்ட பிறகு அவற்றை தனித்துவ வடிவில் அமைக்க கற்பனை செய்து வைத்து கொள்ளுங்கள்.
வீடியோ எடிட்டிங் செய்வதற்கு முன் பயிற்சியைக் முழுவதுமாக கற்றுக்கொள்ளுங்கள்.வீடியோவில் எந்த இடத்தில் பாடல் ஆரம்பிக்க வேண்டும் மற்றும் எந்த இடத்தில் படத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதனை முழுமையாக கற்றுக்கொள்ள இந்த பாடம் உதவுகிறது.
இந்த வீடியோ எடிட்டிங் இல் தேவைப்படுகின்ற Inshot , Canva, Adobe Premiere Pro மென்பொருள் மற்றும் கருவிகள் பயன்படும்.
வீடியோ எடிட்டிங் பற்றி எளிமையாக கற்றுக் கொள்ள இங்கே பார்க்கலாம்.
2.Graphic Design
கிராபிக் வடிவமைப்பு என்பது கற்பனை மற்றும் அற்புதமான துறையாகும்.
இன்று அதிக அளவில் கிராபிக் டிசைனிங் விளம்பரபடுத்துவதற்கும் மற்றும் பிராண்டிங் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த திறன் சிறிய வணிக மற்றும் சந்தைப்படுத்தல் துறை சார்ந்த வல்லுநர்களுக்கு தேவை உள்ளன.
கிராபிக் டிசைன் கற்றுக்கொள்ள எளிமையாக கேன்வாவில் கற்றுக்கொள்ள முடியும். கற்பனை திறனும் மற்றும் படைப்பாற்றல் திறன் இருந்தால் இந்த திறனை எளிதாகவும் விரைவாகவும் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும்.
எப்படி தொடங்குவது?
நீங்க இந்த திறனை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பது எனக்கு புரிகிறது.
இந்த திறனை கற்றுக் கொள்ள கேன்வா உங்களுக்கு எளிதாக விளக்கம் .
இந்த திறனை விரைவாக கற்றுக்கொண்டு பல வாய்ப்புகளை இன்றே பெற்றிடுங்கள்.
கிராபிக் டிசைனிங்கை எளிதாக கற்றுக் கொள்ளுங்கள்.
3.SEO
ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவையை விளம்பரப்படுத்துவதற்கு மார்க்கெட்டிங் தேவைப்படுகிறது.
சமூக வலைதளங்களில் மார்க்கெட் செய்வதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற திறன் வணிகத்திற்கு முக்கிய தேவையாக உள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்க்கு எஸ் சி ஓ முக்கிய பங்காற்றுகிறது.
SEO ( Search Engines Optimization )
இது சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடிய முக்கிய வார்த்தைகளில் அறிந்து அவற்றின் மூலம் புதிய பயனர்களை இணைக்கிறது.
இந்தத் திறனை கற்க குறைந்த செலவு ஆகும். எஸ் யூ ஒயின் பயன் அவரின் பங்களிப்பு அவற்றைப்பற்றி விரிவான விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஒரு திறன் மூலம் பல வணிகங்களை மேன்மைப்படுத்தவும் மற்றும் வாய்ப்புகளை பெற முடியும்.
எப்படி தொடங்குவது ?
பிரபலமான தலங்களில் இது இலவசம் இன்றி கட்டணத்துடன் உடன் பயிற்சி பாடநெறி இருக்கிறது மற்றும் அவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது .
Seo தொழிலுக்கு முக்கிய பாலமாக இருக்கிறது.அதன் மூலம் பல குறிப்புகளை நிறுவனத்திற்கு கிடைக்கிறது.
எஸ் சி ஓ பற்றி எளிதாக இலவசமாக கற்றுக் கொள்ளுங்கள்.
4.Excel
இந்த Excel Sheet முதன் முதலாக மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியது.
பிறகு Google, Sheets என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளது.
Excel மூலம் உற்பத்தி திறன் அதிகரிப்பது, வணிகத்தின் வருமானத்தை கவனித்தல்,தரவுகளை சேர்த்தல் ஒன்றிணைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்ய எளிதாக முடியும்.
இவற்றின் மூலம் Data Analysis, Data Analytics போன்ற பிற திறன்களும் எளிமையாக செயல்படுத்த முடியும்.
இது பள்ளிகள், கல்லூரிகள், வணிகங்கள், நிதி நிறுவனங்கள், அரசு சார்ந்த அலுவலகங்கள், மற்றும் வங்கிகள் போன்றவற்றில் இந்த மென்பொருள் பயன்படுகிறது.
இந்த திறன் எளிதாக இலவசமாக கற்றுக் கொள்ள முடியும். அவற்றின் ஃபார்முலா தெரிந்து இருப்பின் மிகவும் எளிதாக இருக்கும்.
Sheets எப்படி கையாள்வது என்பது பற்றி Google வீடியோ வடிவில் கற்றுத் தருகிறது.
5.App Developer
App Developer என்பது உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தல் முக்கிய பணிகளாகும்.
இந்த திறன்கள் இ காமர்ஸ், வணிகம், கல்வி, பொழுதுபோக்கு, நிதி நிறுவனம், உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, மருத்துவம், செய்தி, உற்பத்தி திறன், சமூக ஊடகம் கருவிகள் மற்றும் வானிலை போன்றவைகளுக்கு தொழில் நுட்பத்துடன் கூடிய மென்பொருள் தயாரிக்கப்படுகின்றன அவற்றின் மூலம் வருமானம் உருவாக்கப்படுகின்றன.
இந்த ஆப் உருவாக்குவதற்கு சில திறன்கள் இருந்தால் போதும் ஆப் உருவாக்க இயலும்.
இந்த மென்பொருளை உருவாக்குவதற்கு Google அமைப்பு பயன்படுகிறது.
மென்பொருளை உருவாக்கிய பின் அவற்றை சோதித்துப் பார்க்க வேண்டும் அவற்றின் வேகம், செயல்படும் விதம் குறைகள் இருப்பின் அவற்றை நிறைவு செய்ய வேண்டும் பிழைகள் இருந்தால் தீர்வு காண வேண்டும்.
இந்த எளிய திறனை கற்றுக் கொண்டு எதிர்கால பல வாய்ப்புகளை இழந்து விடாதீர்கள்.
App Developer Course Google எளிதாக கற்றுத்தருகிறது.
முடிவுரை
டிஜிட்டல் உலகில் பல வாய்ப்புகள் நிறைந்து உள்ளதை அவற்றை சுவையான கனி போல் அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதன் மூலம் பல நன்மைகள் நமக்கு மற்றும் நம் குடும்பத்திற்கும் சிறந்த பலனை எதிர்காலத்தில் கிடைக்கும்.
இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 கருத்துகள்