வீட்டிலிருந்து செய்யக்கூடிய அருமையான பிஸினஸ்

இன்றைய காலத்தில் வேலைக்கு செல்வதைவிட சொந்தமாக சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலர் மனதில் உள்ளது.

ஆகையால் தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு உங்கள் சொந்த வணிகத்தை சிறந்த திட்டத்துடன் தொடங்குகள்.

வீட்டிலிருந்து என்ன வகையான பிஸினஸ் செய்ய முடியும் என்ற கேள்விக்கு விடை சற்று நேரத்தில் உங்களுக்காக முழுமையாக பாருங்கள்.



வீட்டிலிருந்து செய்யக்கூடிய அருமையான பிஸினஸ் "வீட்டில் தயாரிக்கப்பட்ட பேக்கரி  "ஆகும்.இந்த தொழிலுக்கு கிராமம் முதல் நகரங்கள் வரை நல்லதொரு வாய்ப்பு மற்றும் மதிப்பு கிடைக்கும்.

இந்த தொழில் செய்வதற்கு பல டிகிரிகள் மற்றும் காலேஜ் படித்திருக்க வேண்டும் என்ற எந்த வித கட்டாயம் இல்லை.
ஆகையால் இந்த தொழிலை உள்ளூர் பேக்கரி கடைகளில் முழுமையாக கற்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த தொழிலில் நாம் வெற்றி பெற முயற்சி மற்றும் கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் அடைய முடியும்.

அமைவிடம் 

இந்த தொழிலை பற்றி உள்ளூர் கடையில் கற்று அதனை உங்கள் வீட்டில் செய்து பார்த்துப் பிறகு அவற்றின் சுவை மற்றும் விருப்பத்தை புர்த்தி செய்த பிறகு உங்கள் சொந்த வியாபாரத்தை வீட்டில் செய்து அவற்றை பள்ளிகள் மற்றும் கல்லூரி, வணிக வளாகங்கள் அருகாமையில் உங்கள் சிறிய கடையை நடத்திவிடுங்கள்.

நீங்கள் செய்து விற்கும் அந்த கேக்குகள் திண்பண்டங்கள், மற்றும் பிஸ்கட்களை அனைவராலும் உண்ணக்கூடிய வகையில் விலை சற்று குறைவாகவும் மற்றும் தரம் சிறந்தவையாகவும் வையுங்கள்.

இதன் மூலம் பல வாடிக்கையாளர்கள் உங்கள் வணிகத்திற்கு தொடர் வாடிக்கையாளராக உருவாகுவார்கள்.

வகைகள் 

நீங்கள் தயாரித்து விற்கும் பொருட்களில் பல வகையான பொருட்களை இயற்கையான தரத்தில் மற்றும் சிறப்பான சுவையில் செய்யுங்கள்.ஸ்வீட்கள்,கீரிம் பண்கள் மற்றும் காரவகைகளை தயார் செய்து வாருங்கள்‌.

அதேபோல தினமும் தேவைக்கு  ஏற்ப 
புதியதாகவும் மற்றும் சுத்தமாகவும் தயார்படுத்திக் வியாபாரம் செய்து வாருங்கள்.
இதன் மூலம் நுகர்வோர் உங்கள் மீது நம்பிக்கை மற்றும் வாங்குவதில் ஆர்வம்  காட்டுவார்கள்.


கால நேரம் 

இந்த தொழில் பொருத்தவரை காலை மற்றும் மாலையில் நடந்த வியாபாரத்தை விட இரவில் சற்று லாபம் அதிகமாக காணப்படும்.
ஆகையால் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படுத்துவதன் மூலம் நல்ல லாபம் பெற முடியும்.


வருமானம் 

இந்த பகுதி நேர வணிகத்தை செய்வதன் மூலம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 400 - 2000 ரூ லாபமாக கிடைக்கும்.
இந்த லாபத்தில் பாதி அடுத்த நாளுக்கான முதலீடாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்‌.
இதன் மூலம் தேவையில்லாமல் கடன் வாங்குவது தவிர்க்கப்படும் மற்றும் சிறிய வணிகம் சிறப்பாக நடந்து கொண்டு இருந்ததால் பெரிய வணிகத்தை நிறுவ முடியும்.


நீங்கள் ஒரு புதிய முயற்சி செய்கிறீர் ; எனில் அதனை முழுமையாக நேசித்து செய்யுங்கள், வெற்றி நிச்சயம் !




கருத்துரையிடுக

0 கருத்துகள்